ஆர்மேனியா நாடானது, அபுதாபியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு IUCN உலக வளங் காப்பு மாநாட்டின் போது IUCN அமைப்பின் புதிய உறுப்பினராக ஆனது.
இந்த நாட்டில் பனிநிலைப் புல்வெளிகள், மலைக் காடுகள், பகுதியளவு பாலைவனங்கள் மற்றும் நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வாழ்விடங்கள் உள்ளன.
ஆர்மேனியாவில் உள்ள அரிய இனங்களில் மிகவும் அருகி வரும் காகசியன் சிறுத்தை, உள்ளூர் போயர்/பெசோவர் ஆடு மற்றும் செவன் ட்ரௌட் ஏரியில் மட்டுமே காணப்படும் செவன் ட்ரௌட் மீன் ஆகியவை அடங்கும்.
ஆர்மேனியா நாடானது, 2030 ஆம் ஆண்டிற்குள் அதன் 12.9% நிலப்பரப்பில் காடுகளை மீட்டெடுக்கவும், இயற்கை சார்ந்த தீர்வுகளைத் தேசிய கொள்கைகளில் ஒருங்கிணைக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.