ஆர்யபட்டா கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி மையம் – மயங்கு பொருள் நிறமாலை வரைவி
March 9 , 2021 1628 days 751 0
இந்திய விஞ்ஞானிகள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, குறைந்த விலையுடைய வகையில் ஒரு ஒளியியல் நிறமாலைவரைவியை உருவாக்கியுள்ளனர்.
ARIES - தேவஸ்தால் மயங்கு பொருள் நிறமாலை வரைவி & கேமரா (ADFOSC) என பெயரிடப்பட்ட இந்த ஒளியியல் நிறமாலை வரைவியானது நைனிடாலில் உள்ள ஆர்யபட்டா கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி மையத்தால் (ARIES - Aryabhatta Research Institute of Observational Sciences) உள்நாட்டிலேயே வடிவமைத்து, உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரோஸ்கோப் என்பது நாட்டில் இது போன்று தற்போதுள்ள வானியல் நிறமாலை வரைவிகளில் மிகப்பெரிய நிறமாலை வரைவி ஆகும்.
இது 3.6மீ தேவஸ்தால் ஒளியியல் தொலைநோக்கியின் (DOT) மீது வெற்றிகரமாக நிறுவப் பட்டது.
DOT என்பது நாட்டிலும் ஆசியாவிலும் உள்ள மிகப்பெரிய ஒரு தொலைநோக்கி ஆகும்.
இது தொலைதூர குவாசர்கள் மற்றும் விண்மீன் திரள்கள் போன்ற பகுதிகளிலிருந்து மங்கலான ஒளியின் மூலங்களைக் கண்டுபிடிக்க உதவும்.
அந்த மூலங்கள் மிக இளம் வயது பிரபஞ்சம், கருந்துளைகளைச் சுற்றியுள்ள பெரு வெடிப்புப் பகுதிகள், விண்மீன் திரள்கள் மற்றும் அண்ட வெடிப்புகள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியனவாகும்.