ஆறு அபாச்சே ஹெலிகாப்டர்களை வாங்குகிறது இந்திய ராணுவம்
August 19 , 2017 3068 days 1286 0
4,168 கோடி ரூபாய் செலவில் இந்திய இராணுவத்திற்கு ஆறு அபாச்சே ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்திற்குப் பாதுகாப்பு கையகப்படுத்தல் குழு அனுமதி அளித்துள்ளது. இந்த ஆறு அபாச்சே AH-64E ரக ஹெலிகாப்டர்களும் துணை உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களோடு சேர்த்து வாங்கப்படும்.
இந்தியாவுக்கு வழங்குவதற்காக ரஷ்யாவில் இரண்டு அட்மிரல் க்ரிகோரோவிச் ரக கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் பொருத்துவதற்காக உக்ரைனில் இருந்து இரண்டு எரிவாயு விசையாழிகளை வாங்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கையகப்படுத்தல் குழுவானது மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
தற்போது ரஷியாவின் Mi-25 மற்றும் Mi-35 ரக ஹெலிகாப்டர்கள் இந்தியக் கடற்படை இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படுகின்றன.