TNPSC Thervupettagam

ஆறு புதிய தளங்கள் – GIAHS

May 31 , 2025 9 days 24 0
  • ஆறு புதிய தளங்கள் ஆனது சமீபத்தில் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO) உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த வேளாண் பாரம்பரிய அமைப்புகள் (GIAHS) என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
    • பிரேசில் நாட்டில் உள்ள எர்வா-மேட் தாவரத்திற்கான ஒரு பாரம்பரிய வேளாண் வனவியல் அமைப்பு.
    • சீனாவில் முத்துச் சிப்பி (ஒரு மெல்லுடலி), வெள்ளை தேயிலை மற்றும் பேரிக்காய் போன்றவற்றிற்கு மேற்கொள்ளப்படும் சிறப்பு வேளாண் செயல்முறைகள்,
    • மெக்சிகோவில் முக்கிய உணவுப் பயிர்கள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் முந்தைய கால அமைப்பு மற்றும்
    • ஸ்பெயின் நாட்டின் லான்சரோட் தீவின் எரிமலை நிலப்பரப்பில் மேற்கொள்ளப் படும் ஒரு தனித்துவமான வேளாண் முறை
  • இது குடும்ப முறை வேளாண்மை மற்றும் பாரம்பரிய வேளாண் முறைகளை பருவ நிலை மாற்றம், சமூக இடப்பெயர்வுகள் மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற முக்கிய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள 3 தளங்களுடன், சுமார் 28 நாடுகளில் மொத்தம் 95 GIAHS தளங்கள் உள்ளன.
  • இந்தியாவில் உள்ள GIAHS தளங்கள்:
    • காஷ்மீரின் குங்குமப்பூ வளர்ப்பு நகரம்
    • கோராபுட் பாரம்பரிய வேளாண்மை - ஒடிசா
    • கடல் மட்டத்திற்கு கீழே மேற்கொள்ளப்படும் வேளாண் முறை - கேரளா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்