கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் 83 தும்பி இனங்கள் பதிவு செய்யப் பட்டன.
ஆறு புதிய இனங்கள் சேர்க்கப்பட்டதுடன் பூங்காவில் உள்ள தும்பிகளின் எண்ணிக்கை 103 இலிருந்து 109 இனங்களாக அதிகரித்தன.
நீண்ட கால்கள் கொண்ட கிளப்டெயில் (மெரோகோம்பஸ் லாங்கிஸ்டிக்மா), ஃப்ரேசரின் டோரண்ட் ஹாக் (மேக்ரோமியா இராட்டா), டார்க் டாகர்ஹெட் (மேக்ரோமிடியா டொனால்டி), நீல-கழுத்து கொண்ட ரீட் டெயில் (புரோட்டோஸ்டிக்டா மோர்டோனி), வயநாடு டோரண்ட் டார்ட் (யூஃபேயா வயனாடென்சிஸ்), மற்றும் கருப்பு மற்றும் மஞ்சள் பாம்பூடெயில் (எலட்டநியூரா டெட்ரிகா) ஆகிய இனங்கள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன.
யூஃபேயா இனத்தைச் சேர்ந்த மூன்று இனங்கள் சிறந்த நன்னீர் தரத்தைக் குறிக்கின்றன.