2047 ஆம் ஆண்டுக்குள் ‘ஆற்றலில் தற்சார்பு அடைதல்’ என்ற ஒரு இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
இது இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு நிறைவு ஆண்டினைக் குறிக்கின்றது (2047).
2047 ஆம் ஆண்டுக்குள் ஆற்றல் உற்பத்தியில் தற்சார்பு அடைந்த இந்தியாவினை உருவாக்குவதற்கு வேண்டி பெட்ரோலியத்திற்குப் பதிலாக மற்ற வகையிலான ஆற்றலைப் பிரயோகிக்கச் செய்வதற்கான ‘சுழற்சிப் பொருளாதாரத் திட்டம்’ (Mission Circular Economy) என்ற ஒரு திட்டத்தையும் பிரதமர் அறிவித்துள்ளார்.
ஆற்றலில் தற்சார்பு அடைவதற்கான செயல்திட்டங்கள் பின்வருமாறு
பொருளாதாரத்தில் இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டினை அதிகரித்தல்
அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வலையமைப்பு மற்றும் குழாய்வழி இயற்கை எரிவாயு வலையமைப்பு போன்றவற்றை இந்தியா முழுவதும் அமைத்தல் மற்றும்
பெட்ரோலில் 20% எத்தனால் கலவை மற்றும் மின்வாகனப் போக்குவரத்து.