TNPSC Thervupettagam

ஆற்றுக்குருடு நோயை நீக்குதல் – நைஜர்

December 10 , 2025 15 hrs 0 min 5 0
  • உலக சுகாதார அமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட ஓன்கோசெர்சியாசிஸ் பாதிப்பினை ஒழித்த முதல் ஆப்பிரிக்க நாடாக நைஜர் மாறியது.
  • ஆற்றுக்குருடு என்றும் அழைக்கப்படும் ஓன்கோசெர்சியாசிஸ், ஒட்டுண்ணி புழுவான ஒன்கோசெர்கா வால்வுலஸால் ஏற்படுகிறது.
  • வேகமாக ஓடும் ஆறுகளுக்கு அருகில் இனப்பெருக்கம் செய்யும் பாதிக்கப்பட்ட சிமுலியம் கருப்பு ஈக்கள் கடிப்பதால் இந்த நோய் பரவுகிறது.
  • பிரேசில் மற்றும் வெனிசுலாவின் சிறிய பகுதிகளில் பாதிப்புகளுடன், உலகளாவியப் பாதிப்புகளில் பெரும்பாலானவை ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதி மற்றும் ஏமனில் ஏற்படுகின்றன.
  • இந்த நோய் ஆனது, கடுமையான அரிப்பு, தோல்களில் மாற்றங்கள், கண் சேதம் ஆகியவற்றை ஏற்படுத்துவதோடு, மேலும் நிரந்தரப் பார்வைத் திறன் இழப்பிற்கு வழி வகுக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்