TNPSC Thervupettagam

ஆலிவ் ரிட்லிகள் கூடு அமைக்கும் உருப்படிமம்

February 27 , 2026 19 days 139 0
  • சென்னை கடற்கரையில் உலவும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் ரேடியோ-குறியிடல், கூடு அமைக்கும் இட நம்பகத்தன்மைக்கான ஆரம்பகால அறிவியல் சான்றுகளை வழங்கியுள்ளது.
  • தமிழ்நாட்டின் முதல் தொலை அளவியல் ஆய்வு, ஜனவரி 2026 இல் பெசன்ட் நகர் ஆமை குஞ்சு பொரிக்கும் நிலையத்தில் தொடங்கப்பட்டது என்பதோடு வங்காள விரிகுடாவில் இடம்பெயர்வு பாதைகள் மற்றும் உணவளிக்கும் வாழ்விடங்களைக் கண்காணிக்க வேண்டி இது ஃபிளிப்பர் மற்றும் செயற்கைக்கோள் குறியிடலைப் பயன்படுத்துகிறது.
  • இந்த ஆய்வை இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் மேம்பட்ட வனவிலங்குப் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்டு வருகின்றன.
  • தமிழ்நாடு வனத்துறை 10 கடலோர மாவட்டங்களில் 49 ஆமை குஞ்சு பொரிக்கும் கூடங்களை அமைத்துள்ளது.
  • இதுவரை, 1,35,304 முட்டைகளைப் பாதுகாக்கும் 1,150 கூடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதோடு மேலும் 477 குஞ்சுகள் பொரித்து கடலுக்குச் சென்றடைந்துள்ளன.
  • இருப்பினும், இந்தப் பருவத்தில் 680 ஆமை இறப்புகள் பதிவாகியுள்ளன என்பதோடு இதில் அதிக எண்ணிக்கை சென்னை வனவிலங்குப் பிரிவிலிருந்து பதிவாகியுள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்