ஆளில்லா குட்டி விமானத்தை அடிப்படையாகக் கொண்ட கண்காணிப்பு அமைப்பு
August 28 , 2020 1824 days 643 0
மத்திய இரயில்வே துறை அமைச்சகமானது இரயில்வேப் பாதுகாப்பின் பயன்பாட்டிற்காக ஆளில்லா குட்டி விமானத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஆளில்லா குட்டி விமானமானது மத்திய இரயில்வே, தென் கிழக்கு இரயில்வே, மற்றும் தென் மேற்கு இரயில்வே ஆகியவற்றில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தக் கண்காணிப்பு அமைப்பை செயல்படுத்துவதற்காக இரயில்வே துறை அமைச்சகமானது நிஞ்சா என்ற ஒரு ஆளில்லா குட்டி விமானத்தைக் கொள்முதல் செய்துள்ளது.
இந்த ஆளில்லா குட்டி விமானங்கள் காணொலியை ஒளிபரப்பும் திறன் கொண்டதாகவும் நிகழ்நேரக் கண்காணிப்பை மேற்கொள்ளும் திறன் கொண்டதாகவும் விளங்குகின்றது.