ஆளில்லா விமான எதிர்ப்புத் தொழில்நுட்பங்களுக்கான தீர்வு
July 27 , 2021 1468 days 522 0
கான்பூரின் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகமானது ஊடுருவலைக் கண்டறியும் அமைப்பு, ஆளில்லா விமான எதிர்ப்புத் தொழில்நுட்பங்கள், இணைய அமைப்பு முறை மற்றும் பிளாக் செயின் ஆகியவற்றிற்காக வேண்டி இணையவழி பாதுகாப்பு தீர்வு முறைகளைக் கண்டறிவதற்காக ஒரு தொழில்நுட்பப் புத்தாக்க முனையம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
கான்பூரின் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் இந்த C3i முனையமானது கடினமான உள்கட்டமைப்பு உள்ளிட்ட இணையப் பகுதிகளை பாதுகாப்பதில் ஈடுபடும்.
இந்திய அரசானது அண்டை நாடுகளிடமிருந்து, குறிப்பாக சீனாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் இணையவழி பாதுகாப்பு தீர்வுமுறைகளை ஊக்குவித்து வருகிறது.