ஆளில்லா விமானங்களுக்கான தாராளமயமாக்கப்பட்ட விதிகள்
September 2 , 2021 1475 days 669 0
மத்திய வான்வழிப் போக்குவரத்து அமைச்சகமானது ஆளில்லா விமானங்களுக்கான தாராள மயமாக்கப்பட்ட விதிகளை அறிவித்தது.
இந்தத் தாராள மயமாக்கப்பட்ட விதிகள் 2021 ஆம் ஆண்டு ஆளில்லா விமான அமைப்பு விதிகளுக்குப் பதிலாக செயல்படுத்தப்படும்.
டிஜிட்டல் ஸ்கை என்ற ஒரு தளமானது பயனாளிகளுக்கு ஏதுவான ஒரு ஒற்றைச் சாளர அமைப்பாக உருவாக்கப்படும்.
டிஜிட்டல் ஸ்கை தளம்
இது வான்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
No Permission, No take-off போன்ற ஆளில்லா விமான கட்டமைப்புகளுக்காக வேண்டிய ஆதரவை வழங்குவதற்காக பாதுகாப்பான மற்றும் மதிப்பிடக் கூடிய ஒரு தளத்தினை இது வழங்க முயல்கிறது.
இது டிஜிட்டல் முறையில் விமான அனுமதியை வழங்கவும், ஆளில்லா விமானச் செயல்பாடுகள் மற்றும் போக்குவரத்தினை திறம்பட்ட முறையில் நிர்வகிக்கச் செய்தல் ஆகியவற்றிற்காகவும் வேண்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.