ஆளில்லா விமானங்களுக்கான முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட டர்போஜெட் எஞ்சின்
November 23 , 2025 5 days 22 0
சீனா ஒரு ஆளில்லா விமானத்தில் முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட காற்றுச் சுழல் (டர்போஜெட் எஞ்சின்) இயந்திரத்தை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
இந்த இயந்திரம் சுமார் 160 கிலோகிராம் அளவிலான உந்துதலை உற்பத்தி செய்தது.
75 சதவீதத்திற்கும் அதிகமான இயந்திரப் பாகங்கள் முப்பரிமாண அச்சிடலைப் பயன்படுத்தி செய்யப்பட்டன.
ஆளில்லா விமானம் 0.75 மேக் வேகத்தையும் 6,000 மீட்டர் உயரத்தையும் எட்டியது.
இந்த இயந்திரம், இலக்கினைக் குறி வைத்து தாக்கும் ஆயுதங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் தாக்குதல் இலக்காக உள்ள ஆளில்லா விமானங்களுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.