நாட்டில் உள்ள அனைத்து ஆளில்லா விமானங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆளில்லா விமானத்திற்கும் ஒரு தனித்துவ அடையாள எண் (Unique Identification Number - UIN) வழங்கப்பட இருக்கின்றது.
பயனர்கள் தங்களது ஆளில்லா விமானங்களைப் பதிவு செய்வதற்காக “டிஜிட்டல் ஸ்கை” என்ற ஒரு நிகழ்நேர இணைய தளத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
ஆளில்லா விமானங்களின் உரிமையாளர்கள் தங்களது ஆளில்லா விமானங்களைப் பதிவு செய்யத் தவறினால் விமானச் சட்டம், 1934 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
விமானச் சட்டமானது இந்தியாவில் விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கின்றது.
ஈரான் நாட்டின் இராணுவப் படைத் தலைவரான சுலைமானி 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க இராணுவத்தின் ஆளில்லா விமானத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்டார்.