ஆளில்லா விமானத்தில் பொருத்தப்பட்ட ரேடார் அமைப்புகள்
October 3 , 2025 15 days 35 0
எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஆனது, எல்லைக் கண்காணிப்புக்காக இஸ்ரோவுடன் இணைந்து ரேடார் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்களை உருவாக்கி வருகிறது.
இந்த ஆளில்லா விமானங்கள் சர்வதேச எல்லையைக் கடக்காமல் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளைக் கண்காணிக்கும்.
மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள அதன் தேகான்பூர் அகாடமியில் BSF இந்த ஆளில்லா விமானங்களைத் தயாரிக்கும்.
ரேடார் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்களானது எல்லைப் பகுதியில் ஊடுருவும் நபர்கள், சிறிய வாகனங்கள் அல்லது கடத்தல் முயற்சிகளின் செயல்பாடுகளை நிகழ் நேரத்தில் கண்டறிய உதவும்.