இந்திய உச்ச நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவைக் கவனத்தில் கொள்ளுமாறு ஆளுநர்களுக்கு நினைவூட்டியுள்ளது.
இந்தச்சரத்து மசோதாகளுக்கு அவர்கள் "முடிந்தவரை விரைவில்" ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது மசோதாக்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என கட்டளை இடுகிறது.
இங்கு 'முடிந்த வரை விரைவில்' என்ற சொற்றொடர் குறிப்பிடத்தக்க உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது எனவும் இதை அனைத்து அரசியலமைப்புசார் அதிகாரிகளும் மனதில் வைத்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து அம்மாநில ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப் பட்ட பல முக்கியமான மசோதாக்களை தனது நிலுவையில் வைத்து இருப்பதாக புகார் தெரிவித்து தாக்கல் செய்த மனுவின் மீதான, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் ஒரு பகுதியாக இது உள்ளது.