ஆள்கடத்தலுக்கு உள்ளானவர்களின் சர்வதேச தினம் – ஆகஸ்ட் 30
August 30 , 2019 2204 days 560 0
ஆள்கடத்தலுக்கு உள்ளானவர்களின் சர்வதேசத் தினம் என்பது பல்வேறு இடங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அல்லது சட்ட பிரதிநிதிகளுக்குத் தெரியாமல் மோசமான நிலைமைகளில் வாழும் மக்கள் ஆகியோரின் நிலைமை குறித்த கவனத்தை ஈர்க்கும் ஒரு நாளாகும்.
இது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
இந்த நாள் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று ஐ.நா பொதுச் சபையால் நிறுவப்பட்டது.
ஆள்கடத்தலுக்கு உள்ளாவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தின் கீழ் நாடுகள் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதை பரிசீலிக்க இந்த நாள் அனுமதிக்கின்றது.