ஆள்கடத்தலுக்கு உள்ளானவர்கள் மீதான சர்வதேச தினம் – ஆகஸ்ட் 30
August 30 , 2020 1787 days 476 0
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இந்தத் தினத்தை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று அறிவித்தது.
கடத்தல், தடுத்து நிறுத்தி வைத்தல், சிறை பிடித்தல் மற்றும் இதர காரணங்களினால் விருப்பமின்றி அல்லது கட்டாயமாக காணாமல் போனவர்கள் இந்தச் செயலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த ஆண்டானது ஆள்கடத்தலுக்கு உள்ளான அனைத்து நபர்களுக்கும் பாதுகாப்பு அளித்தல் என்பது தொடர்பான பிரகடனத்தின் 40வது ஆண்டு நினைவு தினத்தையும் ஆள்கடத்தலுக்கு உள்ளானவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தலுக்கான ஒப்பந்தத்தின் 10வது ஆண்டு நினைவு தினத்தையும் குறிக்கின்றது.