பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழுவானது ‘ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தை’ அமல்படுத்துவதற்கு வேண்டி அதன் ஒப்புதலை வழங்கி உள்ளது.
இந்தத் திட்டமானது புவி அறிவியல் அமைச்சகத்தினால் முன்மொழியப்பட்டதாகும்.
இது ஆழ்கடலிலுள்ள வளங்களை ஆராய்ந்து அவற்றை நிலையான முறையில் பயன்படுத்துவதற்காக வேண்டி ஆழ்கடல் தொழில்நுட்பங்களை உருவாக்கச் செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
இது ஒரு ஐந்தாண்டு காலத் திட்டமாகும்.
இத்திட்டத்தின் முதல் கட்டமானது 2021-2024 எனும் காலகட்டத்தின் போது மேற்கொள்ளப் படும்.
இந்திய அரசின் நீலப் பொருளாதார முன்னெடுப்பிற்கு வேண்டிய உதவிகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
புவி அறிவியல் அமைச்சகமானது இந்தத் திட்டத்தின் முதன்மை அமைச்சமாக செயல்படும்.