November 10 , 2025
11 days
53
- மினாமிடோரிஷிமா தீவுக்கு அருகில் ஆழ்கடல் சுரங்கத்தை உருவாக்க ஜப்பானும் அமெரிக்காவும் ஒரு கூட்டாண்மையை அறிவித்துள்ளன.
- தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு இன்றியமையாத அருமண் வளங்களைப் பாதுகாப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஜப்பானின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் (EEZ) 5,000 முதல் 6,000 மீட்டர் ஆழத்தில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த ஆய்வு தொடங்கும்.
- சீனா தற்போது உலகின் சுத்திகரிக்கப்பட்ட அருமண் மற்றும் காந்தங்களில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை உற்பத்தி செய்கிறது.
- இந்தத் திட்டமானது உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைப் பன்முகப் படுத்தவும் சீன ஏற்றுமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் முயல்கிறது.

Post Views:
53