April 10 , 2026
2 days
65
- உயிரியல் பன்முகத் தன்மை சட்டம் 2002-இன் கீழ், புதிய மையங்களை தேசிய களஞ்சியங்களாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
- கேரளாவில் உள்ள CMLRE (கடல் வாழ் வளங்கள் மற்றும் சூழலியல் மையம்) அமைப்பின் பவசாகரா பரிந்துரை மையம் தேசிய களஞ்சியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிராவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனமும் தேசிய களஞ்சியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த மையங்கள் ஆழ்கடல் விலங்குகள் மற்றும் உயிரியல் மாதிரிகளைச் சேமித்து பாதுகாக்கும்.
- இவை சான்று மாதிரிகள், டிஎன்ஏ தரவுகள் மற்றும் இந்தியக் கடற்பகுதியில் கண்டறியப் பட்ட புதிய இனங்களைப் பாதுகாக்கும் அமைப்பாகச் செயல்படும்.
Post Views:
65