சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ள இந்தியாவைச் சேர்ந்தவர்களின் விவரங்களை இந்தியா முதல்முறையாகப் பெற்றுள்ளது.
இந்தத் தகவல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய தானியங்கி தகவல் பரிமாற்றக் கட்டமைப்பின் (AEOI - automatic exchange of information framework) கீழ் வாங்கப் பட்டுள்ளன.
AEOI கட்டமைப்பின் கீழ் இந்தியா சுவிட்சர்லாந்திடமிருந்து நிதி குறித்த விவரங்களைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
AEOI ஆனது பின்வரும் நிதிக் கணக்குகள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வழிவகை செய்கின்றது.
தற்பொழுது செயல்பாட்டில் உள்ள நிதிக் கணக்குகள்
2018 ஆம் ஆண்டில் மூடப்பட்ட வங்கிக் கணக்குகள்
அடுத்த பரிமாற்றமானது செப்டம்பர் 2020 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கின்றது.