மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி கடனுதவியுடன் இணைக்கப்பட்ட மானியச் சேவைகளை வழங்கும் ஆவாஸ் என்ற இணைய தளத்தைத் (Credit-linked Subsidy Services Awas Portal - CLAP) தொடங்கி வைத்தார்.
இந்தத் தளமானது கடனுதவியுடன் இணைக்கப்பட்ட மானியச் சேவையைப் (credit-linked Subsidy Service - CLSS) பெறும் பயனாளிகளுக்கு ஒரு வெளிப்படையான மற்றும் வலுவான நிகழ்நேர (ஆன்லைன்) வலை அடிப்படையிலான கண்காணிப்பை வழங்குகின்றது.
CLSS என்பது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் உள்ள ஒரு அங்கமாகும். வங்கிகளிடமிருந்து வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது.