பிரான்சு ஆனது விண்வெளியில் முதலாவது இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இது தனது செயற்கைக்கோள்கள் மற்றும் இதரப் பாதுகாப்பு உபகரணங்களைத் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகத் தனது திறனை மதிப்பிடுவதற்கு வேண்டி அந்நாட்டிற்கு உதவ இருக்கின்றது.
இந்தப் பயிற்சிக்கு “ஆஸ்டர்எக்ஸ்” என்று குறியீட்டுப் பெயர் இடப்பட்டுள்ளது.
இதில் ஜெர்மனியின் விண்வெளிப் படை மற்றும் அமெரிக்காவின் விண்வெளிப் படை ஆகிய இரண்டும் கலந்து கொள்கின்றன.
அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப் பிறகு உலகில் மூன்றாவது விண்வெளி வல்லரசு நாடாக பிரான்சு விரும்புகின்றது.