ஆஸ்திரேலிய மெரினோ செம்மறி ஆடுகள் - இமாச்சலப் பிரதேசம்
August 31 , 2026 13 days 132 0
கம்பளித் தரத்தை மேம்படுத்தவும், மாநிலத்தின் கம்பளி உற்பத்தியை அதிகரிக்கவும் ஆஸ்திரேலிய மெரினோ செம்மறி ஆடுகளை இமாச்சலப் பிரதேசம் அறிமுகப் படுத்தியது.
தேசிய வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஆஸ்திரேலியாவிலிருந்து 240 மெரினோ செம்மறி ஆடுகள் இறக்குமதி செய்யப்பட்டு 2021 ஆம் ஆண்டில் ₹6 கோடி மதிப்பிலான இத்திட்டம் தொடங்கியது.
செயற்கை கருவூட்டல் மூலம் மெரினோ மற்றும் உள்நாட்டு காடி செம்மறி ஆடுகள் கலப்பினம் செய்யப்பட்டு, 800 ஆரோக்கியமான குட்டிகள் உருவாக்கப்பட்டன.
சிறந்த, ஆடை தரத்திலான கம்பளியை உற்பத்தி செய்வதற்காக கம்பளியின் தடிமனை சுமார் 27 மைக்ரான்களில் இருந்து 21-22 மைக்ரான்களாகக் குறைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசம் தனது ஆண்டு கம்பளி உற்பத்தியை சுமார் 1,500 டன்னில் இருந்து 2027 ஆம் ஆண்டிற்குள் 3,000 டன்னாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.