இந்தியாவை மாற்றியமைப்பதற்கான தேசிய நிறுவனமானது (நிதி ஆயோக்) இ-சவாரி இந்திய மின்சாரப் பேருந்து கூட்டணியைத் தொடங்கியது.
இது நகர்ப்புற இயங்குதிறனை மாற்றியமைப்பதற்கான முன்னெடுப்பின் ஆதரவுடன் கன்வெர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீஸ் லிமிடெட் மற்றும் இந்தியாவின் உலக வளங்கள் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்டது.
மின்சாரப் பேருந்துச் சேவைகளை இந்தியாவில் தடையின்றி ஏற்றுக் கொள்வதற்கான ஒரு செயல்முறையை விரிவுபடுத்துவதில் பல்வேறு பங்குதாரர்களின் (மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள், போக்குவரத்துச் சேவை வழங்குநர்கள், அசல் உபகரண உற்பத்தியாளர்கள்) கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதே இந்த முன்னெடுப்பின் ஒரு நோக்கமாகும்.