சட்டத்தின் கீழ் கோரப்படும் மோட்டார் வாகன விபத்துகள் மற்றும் கோரிக்கைகள் மீதான தரவுகளை நெறிமுறைப் படுத்துவதற்கான e-DAR எனப்படும் ஒரு இணைய தளத்தின் செயல்விளக்கமானது சமீபத்தில் உச்சநீதிமன்றத்திடம் வழங்கப்பட்டது.
E-DAR (விரிவான இணைய வழி விபத்து அறிக்கை) என்பது காப்பீட்டு நிறுவனங்களின் ஆதரவோடு சாலைகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தினால் உருவாக்கப்பட்டது.
இது சில புகைப்படங்களைக் கொண்டு சாலை விபத்துகள் பற்றிய உடனடித் தகவல்களைத் தந்து, விபத்து இழப்பீட்டுக் கோரிக்கைகளைத் துரிதப் படுத்தவும், பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கவும் உதவும்.