2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02 அன்று பிரதமர் நரேந்திர மோடி ‘இ-ரூபி டிஜிட்டல் பணவழங்கீட்டு முறை’ என்ற ஒரு முறையினைத் தொடங்கி வைத்தார்.
இ-ரூபி என்பது இணையவழி ரசீது அடிப்படையிலான ஒரு பணவழங்கீட்டு முறை ஆகும்.
இது அரசிற்கும் பயனாளிகளுக்கும் இடையேயான தொடர்புகளை வரையறுக்கச் செய்வதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மற்றும் வேறு எவருக்கும் சென்றடையா வண்ணம் அரசின் நலத் திட்டப் பலன்கள், குறிப்பிட்ட பயனாளிகளை சென்றடைவதை இத்தளம் உறுதி செய்கிறது.
இ-ரூபி என்பது பயனாளிகள் பற்று அட்டைகள், டிஜிட்டல் பணவழங்கீட்டுச் செயலிகள் (அ) இணைய வங்கி வசதி போன்றவற்றைப் பயன்படுத்தாமலேயே ரசீதினைப் பெறச் செய்து ஒரு முறை பணம் செலுத்தக் கூடிய செயல்முறையாகும்.
இந்தியத் தேசியக் கொடுப்பனவு கழகமானது தனது ஒருங்கிணைந்த பணவழங்கீட்டு இடைமுகத் தளத்தில் இந்த இ-ரூபி தளத்தினை உருவாக்கியுள்ளது.
இது நிதிச் சேவைத் துறை, சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றினால் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.