மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் இஞ்செட்டி சீனிவாஸ் என்பவரின் தலைமையில் பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை-2018 (Corporate Social Responsibility - CSR) என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக அந்த அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருக்கின்றது.
இக்குழு ஏற்கெனவே உள்ள கட்டமைப்பை ஆய்வு செய்து பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை மீதான ஒத்திசைவான கொள்கை ஒன்றை ஏற்படுத்துவதற்கான பாதையை வழிவகுக்கும்.
நிறுவனங்கள் சட்டமானது,
500 கோடி ரூபாய் நிகர மதிப்பு அல்லது 1000 கோடி ரூபாய் வருமானம் அல்லது நிகர லாபம் 5 கோடி ரூபாய் உடைய நிறுவனங்கள் குறைந்த பட்சம் தங்கள் லாபத்தில் 2 சதவிகிதத்தை பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமைக்காக செலவிட வேண்டும் என வற்புறுத்துகின்றது.