மத்திய உள்துறை அமைச்சகம் 2026 ஆம் ஆண்டில் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களின் வகைப்பாட்டை மாற்றியமைத்துள்ளது.
"மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்" என்ற பழைய வகைப்பாட்டிற்குப் பதிலாக, தற்போது “LWE பாதிக்கப்பட்ட,” “கவனத்திற்குரிய மாவட்டங்கள்” மற்றும் “மரபு மற்றும் உத்வேக மாவட்டங்கள்” என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
2024–25 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆக மாற்றமின்றி உள்ளது.
2005 ஆம் ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட மாவட்டங்களாக இருந்த “சிவப்பு வழித்தடம்”, 2026 ஆம் ஆண்டில் வெறும் 2 மாவட்டங்களாக வெகுவாகக் குறைந்துள்ளது.
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மற்றும் ஜார்கண்டின் மேற்கு சிங்பம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் மட்டுமே தற்போது “LWE பாதிக்கப்பட்ட” மாவட்டங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.
சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டம் “கவனத்திற்குரிய மாவட்டமாக” வகைப்படுத்தப் பட்டுள்ளது.
9 மாநிலங்களில் உள்ள மொத்தம் 35 மாவட்டங்கள் “மரபு மற்றும் உத்வேக மாவட்டங்கள்” பிரிவின் கீழ் வருகின்றன.
இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான தேசியக் கொள்கை மற்றும் செயல் திட்டம் 2015 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.