கடந்த 5 ஆண்டுகளில் இடது சாரித் தீவிரவாதம் (LWE– Left Wing Extremism) குறைந்துள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் அறிவித்துள்ளார்.
இடதுசாரித் தீவிரவாதம் குறைந்ததற்கு முக்கியமான காரணம் “தேசியக் கொள்கை மற்றும் செயல்திட்டம் 2015” என்ற திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதாகும்.
2019 ஆம் ஆண்டில், LWE-ன் எண்ணிக்கையானது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 38 சதவிகிதம் என்ற அளவாகக் குறைந்துள்ளது.
இந்த அமைப்புகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் எதிர்வினை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை 1967 ஆம் ஆண்டின் இந்தியாவின் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றது.
இந்த பகுதிகளில் பரவியுள்ள நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் ஆகிய அமைப்புகள் இச்சட்டத்தின் கீழ் தீவிரவாதக் குழுக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சிவப்புப் பிராந்தியமானது (Red Corridor) இந்தியாவின் தெற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
இது ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியுள்ளது.