இடப்பெயர்வு மற்றும் மேம்பாட்டு சுருக்கம் 33 - அறிக்கை
November 3 , 2020 1837 days 720 0
இது உலக வங்கியால் வெளியிடப் பட்டுள்ளது.
சமீபத்திய வரலாற்றில் முதல்முறையாக, சர்வதேச புலம்பெயர்ந்தோரின் பங்கு 2020 ஆம் ஆண்டில் குறைய வாய்ப்புள்ளது.
இது ஏனென்றால் புதிய இடம்பெயர்வு குறைந்து, திரும்பும் இடம்பெயர்வு அதிகரித்து உள்ளதால் ஏற்பட்டுள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்குப் பணம் அனுப்புவது 7 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2020 ஆம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து பணம் பெறவிருக்கும் முதல் 5 நாடுகள் இந்தியா, சீனா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகியனவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.