இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பொது இயக்குநர்
July 2 , 2018 2568 days 832 0
ஐ.நா.வின் இடம் பெயர்வு நிறுவனமான, இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் அடுத்த பொது இயக்குநராக போர்ச்சுக்கலின் அண்டோனியோ மேனுவல் டி கார்வெல்கோ பெரியிரா விட்டோரினா (61) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தற்போது பதவியில் உள்ள பொது இயக்குநர் வில்லியம் லேசி சுவிங் ஆவார். இவர் இரண்டாவது முறையாக ஐந்து ஆண்டுகளுக்கான பணியை நிறைவு செய்ய உள்ளார் இப்பதவிக்கு அண்ட்டோனியோ மேனுவல் டி கார்வெல்கோ பெரியிரா விட்டோரினா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் உயரிய பதவிக்கான தேர்தலில் (இரகசிய வாக்கெடுப்பின் மூலம்) விட்டோரினோ கோஸ்டா ரிக்காவின் லாரா தாம்சன் மற்றும் அமெரிக்காவின் கென் ஐசக்சை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இவர்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
IOM (International Organisation for Migration) ஆனது ஐ.நா.வின் இடம் பெயர்வு நிறுவனம் ஆகும். இதன் தலைமையிடம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா ஆகும்.
இரண்டாம் உலகப் போரில் இடம் பெயர்ந்த மக்களை மறுகுடியமர்த்த 1951-ல் ஐரோப்பிய குடியேற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவாக (ICEM-Intergovernmental Committee for European Migration) தொடங்கப்பட்டது.
ஐ.நா. பொது அவைக்கான பார்வையாளர் அந்தஸ்து 1992-ல் IOM-ற்கு வழங்கப்பட்டது. ஐ.நா மற்றும் இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றிற்கிடையேயான கூட்டுறவு ஒப்பந்தம் 1996-ல் கையெழுத்தானது.