ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் கஜபதி வம்சத்துடன் தொடர்புடைய இடைக்கால தெலுங்கு கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப் பட்டது.
இக்கல்வெட்டு ஒடிசாவின் கஜபதி வம்சத்தைச் சேர்ந்த 15ஆம் நூற்றாண்டு மன்னரான புருஷோத்தம தேவாவுடன் தொடர்புடையது.
இது கஜபதி மன்னரின் கீழ் பணி புரிந்த நிர்வாக அதிகாரியான குமாரகுரு மகாபத்ரா பற்றி குறிப்பிடுகிறது.
இந்தக் கல்வெட்டு கோவில் மண்டபத்தில் உள்ள ஒரு கல் தூணில் கண்டறியப்பட்டது மற்றும் இது தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கோவில் கலைப்பொருட்கள் ஆந்திரப் பிரதேசத்தின் முக்கியமான இடைக்கால மையமான கொண்ட வீடு கோட்டையிலிருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப் படுகிறது.