ஆக்ஸ்பேம் இந்தியாவானது “இடைவெளி குறித்த கவனம் - இந்தியாவில் வேலைவாய்ப்பின் நிலைமை” என்ற தலைப்பு கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, தரமான வேலை வாய்ப்புகள் போதாமை மற்றும் சம்பள ஏற்றத்தாழ்வு ஆகியவை இந்தியத் தொழிலாளர் சந்தையில் சமத்துவமின்மை நிலவுவதைக் குறிக்கின்றன.
இந்த அறிக்கையானது சம்பளத்திலும் தினக் கூலியிலும் பாலின சமத்துவமற்ற தன்மை நிலவுவதை எடுத்துக் காட்டுகின்றது. மேலும் பெண்கள் எவ்வாறான பணியில் இருந்தாலும் அவர்கள் எவ்வாறு குறைந்த ஊதியத்தினைப் பெறுகின்றனர் என்பதையும் இது எடுத்துக் காட்டுகின்றது.
மேலும் இது NSSO (National Sample Survey Organisation) கணக்கெடுப்பின் அடிப்படையில் சராசரியாக ஒரு பணிக்குத் தகுதி வாய்ந்த ஆண் தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தை விட பெண் தொழிலாளர்கள் 34 சதவிகிதம் குறைவாகப் பெறுகின்றனர் என்றும் கூறுகின்றது.
ஆக்ஸ்பேம்
வறட்சி நிவாரணத்திற்கான ஆக்ஸ்போர்டு குழு - ஆக்ஸ்பேம் என்பது உலக வறுமையை ஒழிப்பதற்காக 1942 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமாகும்.
ஆக்ஸ்பேமானது இந்தியாவில் மனிதாபிமான சேவையின் 67-வது ஆண்டை அனுசரிக்கின்றது.
1951 ஆம் ஆண்டில் ஆக்ஸ்பேம் கிரேட் பிரிட்டன் ஆனது பீகார் வறட்சிக்கான தனது முதலாவது முழு அளவிலான மனிதாபிமான உதவி வழங்குவதைத் தொடங்கியது.