இணை இருப்பிடம் மற்றும் டார்க் ஃபைபர் வழக்குகளில் NSE தீர்வுகள்
January 23 , 2026 208 days 254 0
இணை இருப்பிடம் மற்றும் டார்க் ஃபைபர் வழக்குகளைத் தீர்ப்பதற்கு தேசியப் பங்குச் சந்தை (NSE) இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து (SEBI) முதன்மை ஒப்புதலைப் பெற்றுள்ளது.
இணை இருப்பிடம் என்பது தரகர்கள் பரிமாற்றத் தரவை விரைவாக அணுக அனுமதிக்கிறது, மேலும் டார்க் ஃபைபர் என்பது தனியார் தரவுப் பரிமாற்றத்திற்கான பயன்படுத்தப்படாத ஒளியிழை வடங்களைக் குறிக்கிறது.
இந்த வசதிகள் மூலம் சில தரகர்கள் நியாயமற்ற விரைவு செயலாக்க நன்மைகளைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்காக NSE 1,387.39 கோடி ரூபாயை ஒதுக்கியது.
இந்த ஒப்புதல் SEBI வாரியத்தின் இறுதி அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில், NSE சந்தையின் IPO செயல்முறையை விரைவுபடுத்தக்கூடும்.
பங்குச் சந்தைகளுக்கு வெளியே வர்த்தகம் செய்யப்படும் பட்டியலிடப்படாதப் பங்குகளை ஒழுங்குபடுத்துவது குறித்தும் SEBI ஆராய்ந்து வருகிறது.