TNPSC Thervupettagam

இணை இருப்பிடம் மற்றும் டார்க் ஃபைபர் வழக்குகளில் NSE தீர்வுகள்

January 23 , 2026 8 hrs 0 min 16 0
  • இணை இருப்பிடம் மற்றும் டார்க் ஃபைபர் வழக்குகளைத் தீர்ப்பதற்கு தேசியப் பங்குச் சந்தை (NSE) இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து (SEBI) முதன்மை ஒப்புதலைப் பெற்றுள்ளது.
  • இணை இருப்பிடம் என்பது தரகர்கள் பரிமாற்றத் தரவை விரைவாக அணுக அனுமதிக்கிறது, மேலும் டார்க் ஃபைபர் என்பது தனியார் தரவுப் பரிமாற்றத்திற்கான பயன்படுத்தப்படாத ஒளியிழை வடங்களைக் குறிக்கிறது.
  • இந்த வசதிகள் மூலம் சில தரகர்கள் நியாயமற்ற விரைவு செயலாக்க நன்மைகளைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
  • இந்தக் குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்காக NSE 1,387.39 கோடி ரூபாயை ஒதுக்கியது.
  • இந்த ஒப்புதல் SEBI வாரியத்தின் இறுதி அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில், NSE சந்தையின் IPO செயல்முறையை விரைவுபடுத்தக்கூடும்.
  • பங்குச் சந்தைகளுக்கு வெளியே வர்த்தகம் செய்யப்படும் பட்டியலிடப்படாதப் பங்குகளை ஒழுங்குபடுத்துவது குறித்தும் SEBI ஆராய்ந்து வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்