TNPSC Thervupettagam

இணைய சங்கேதப் பண KYC விதிகள்

January 17 , 2026 5 days 54 0
  • இணைய சங்கேதப் பணப் பயனர்களுக்கு இந்தியாவானது கடுமையான உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) மற்றும் பணமோசடித் தடுப்பு (AML) விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த விதிகள் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிதிப் புலனாய்வுப் பிரிவு - இந்தியா (FIU-இந்தியா) அமைப்பினால் வெளியிடப்படுகின்றன.
  • பயனர்கள் நேரடி செல்ஃபிகள், ஜியோ-டேக்கிங் மற்றும் வங்கிக் கணக்குச் சரிபார்ப்பு மூலம் அடையாள சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும்.
  • இணைய சங்கேதப் பணக் கணக்குகள் நிரந்தரக் கணக்கு எண் (PAN) மற்றும் இரண்டாம் நிலை அடையாள எண்ணுடன் இணைக்கப் பட வேண்டும்.
  • பரிவர்த்தனை தடங்களை மறைக்கும் மிக்சர்கள், டம்ளர்கள் மற்றும் தனியுரிமை டோக்கன்கள் போன்ற கருவிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
  • புதிய நடவடிக்கைகள் பணமோசடி, தீவிரவாத நிதியுதவியைத் தடுப்பதையும், அனைத்து இணைய சங்கேதப் பணப் பரிவர்த்தனைகளும் கண்டறியக் கூடியவை என்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்