இணைய சங்கேதப் பணம் குறித்த ஒன்பது அம்ச செயல் திட்டம்
March 6 , 2023 893 days 461 0
இணைய சங்கேதப் பணம் சார்ந்தவற்றினை உலக நாடுகள் எவ்வாறு கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கான ஒன்பது அம்ச செயல் திட்டத்தினைச் சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ளது.
நிதியியல் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக, பிட்காயின் போன்றவற்றிற்குச் சட்டப்பூர்வப் பணம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு இது எதிரானதாகும்.
அதிகப்படியான மூலதன வரவினைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளுமாறு இதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இணைய சங்கேதப் பணம் சார்ந்த சொத்துக்கள் தொடர்பான தெளிவான வரி விதிப்பு விதிமுறைகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்றுவதற்கு அறிவுறுத்தப் பட்டு உள்ளது.
அனைத்து இணைய சங்கேதப் பணம் சார்ந்த சந்தை நிறுவனங்களுக்குமான கண்காணிப்பு விதிமுறைகளை உருவாக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளது.
அமலாக்க விதிமுறைகளை அதிகரிப்பதற்காக வேண்டி சர்வதேச அளவிலான அமைப்புகளை நிறுவுதல்.
இணைய சங்கேதப் பணத்தின் தாக்கத்தினைக் கண்காணிப்பதற்கான வழி முறைகளை நிறுவுதல்.
இணைய சங்கேதப் பணத்தினைப் பயன்படுத்தச் செய்யும் நிறுவனங்களுக்கு வரி விதித்தல்.
2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எல் சால்வடார், பிட்காயினை சட்டப்பூர்வப் பணமாக ஏற்றுக் கொண்ட முதல் நாடாக மாறியது.
அந்நாட்டில் பிட்காயின் பயன்பாட்டின் போது 60 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் அந்நாட்டு பொருளாதாரம் இழந்ததோடு, பொருளாதார நெருக்கடி மற்றும் மிக அதிக நிதிப் பற்றாக்குறையையும் அந்நாடு எதிர்கொண்டது.