இணைய முடக்கம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை
July 7 , 2022 1160 days 535 0
இணையத்தை முடக்குவது மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதிக்கிறது என்றும் தகவல் பரிமாற்றத்தினைத் தடுக்கிறது மற்றும் பொருளாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கிறது என்றும் OHCHR அறிக்கை குறிப்பிடுகிறது.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகம் என்பது பொதுவாக மனித உரிமைகளுக்கான அலுவலகம் அல்லது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான அலுவலகம் என்று அழைக்கப் படும்.
இணைய முடக்கம் என்பது ஒரு அரசாங்கத்தால் அல்லது அரசாங்கத்தின் சார்பாக தகவல் மற்றும் தகவல்தொடர்பு அமைப்புகளை அணுகுவதையும் அதனைப் பயன்படுத்துவதையும் வேண்டுமென்றே முடக்கச் செய்வதற்காக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் ஆகும்.
#KeepItOn என்ற கூட்டணியின் அறிக்கைப் படி, 2016-2021 ஆம் ஆண்டுகள் வரையில் 74 நாடுகளில் 931 இணைய முடக்கங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஆவணப் படுத்தப் பட்டுள்ளன.
#KeepItOn கூட்டணியானது உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் இணைய முடக்க நிகழ்வுகளைக் கண்காணிக்கிறது.
இந்தியா 106 முறை இணைய இணைப்புகளைத் தடுத்துள்ளது அல்லது முடங்கி உள்ளது.
மேலும், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இணைய முடக்கத்தில் குறைந்தது 85 முடக்கங்கள் ஜம்மு & காஷ்மீரில் மேற்கொள்ளப் பட்டுள்ளன.