இணைய வனவிலங்கு வர்த்தகம் குறித்த அறிக்கை – உலக வனவிலங்கு நிதியம்
April 6 , 2022 1221 days 520 0
மியான்மரில் இணையவழி வனவிலங்கு வர்த்தகம் அதிகரித்து வருவதாக உலக வன விலங்கு நிதியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது
இது அருகி வரும் உயிரினங்களுக்கும் பொதுச் சுகாதாரத்திற்கும் மிகப்பெரும் ஒரு ஆபத்தை விளைவிக்கச் செய்வதாக கூறுகின்றது.
2021 ஆம் ஆண்டில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து இத்தகையப் பரிவர்த்தனைகளைத் தடை செய்வதற்கான அமலாக்க நடைமுறைகள் அந்த நாட்டில் பலவீனமடைந்துள்ளன.
ஒரு வருடத்தில் இத்தகையப் பரிவர்த்தனைகள் 74% அளவிற்கு உயர்ந்துள்ளன.
வர்த்தகம் செய்யப்பட்ட 173 இனங்களில், 54 இனங்கள் உலகளவில் அழிந்து வரும் நிலையில் உள்ளன.
வனவிலங்கு வர்த்தகங்களுடன் தொடர்பான 639 முகநூல் கணக்குகள் அடையாளம் காணப் பட்டு முடக்கப்பட்டன.