இணைய வழி நீதிமன்றங்கள் மூன்றாம் கட்டம்
September 26 , 2023
593 days
364
- 7,210 கோடி நிதி செலவில் இணைய வழி நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இது கீழ்நிலை நீதித்துறையின் எண்ணிம உள்கட்டமைப்பினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த மத்திய அரசு திட்டம் ஆனது நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
- இத்திட்டத்தின் மூன்றாம் கட்டம் ஆனது பழைய மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் இரண்டையும் உள்ளிட்ட முழு நீதிமன்றப் பதிவுகளையும் எண்ணிம மயமாக்க உள்ளது.
- மொத்தம் 3,108 கோடி ஆவணங்கள் எண்ணிம மயமாக்கப்படும்.

Post Views:
364