வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பானது, எஸ்டோனியா நாட்டில் லாக்ட் ஷீல்ட்ஸ் எனப்படும் இணையவழிப் பாதுகாப்புப் பயிற்சிகளை நடத்தியது.
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இணைய அமைப்பானது, உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான "live-fire" எனப்படும் இணையப் பாதுகாப்புப் பயிற்சிகளை மேற்கொள்ளும்.
நிகழ்நேரத் தாக்குதல்களுக்கு எதிராக தேசியத் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு ஆகியவற்றைப் பாதுகாக்கும் இணையப் பாதுகாப்பு நிபுணர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த லாக்ட் ஷீல்ட்ஸ் நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.