இணைய வழியில் தொழிலாளர்கள் மசோதா 2025 – ஜார்க்கண்ட்
December 22 , 2025 12 days 71 0
ஜார்க்கண்ட் தள அடிப்படையிலான இணைய வழித் தொழிலாளர்கள் (பதிவு மற்றும் நலன்புரி) மசோதா, 2025 ஆனது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் ஆனது இணையம் மற்றும் இணைய தளம் அடிப்படையிலான தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை வழங்குகிறது.
இது டிஜிட்டல் தளங்கள் மற்றும் விநியோகம், போக்குவரத்து மற்றும் தேவைக்கேற்ப வழங்கப்படும் சேவைகள் போன்ற துறைகளில் சேவை திரட்டு நிறுவனங்கள் மூலம் ஈடுபடும் தொழிலாளர்களுக்குப் பொருந்தும்.
தொழிலாளர்களைப் பதிவு செய்யவும், அடையாள அட்டைகளை வழங்கவும், நலத் திட்டங்களை மேற்பார்வையிடவும் ஒரு இணையவழித் தொழிலாளர் நல வாரியம் அமைக்கப் படும்.
இந்தச் சட்டம் குறைந்தபட்ச ஊதியங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புச் சலுகைகளை கட்டாயமாக்குகிறது என்பதோடுமேலும் அதன் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.