இணையதள விளையாட்டுகளுக்கு GST விதிப்பு – ஆய்வுக் குழு
May 31 , 2021 1566 days 633 0
இணையதள விளையாட்டுகளின் மீது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பதற்காக வேண்டி அவற்றின் சேவை மதிப்பீட்டினை ஆய்வு செய்வதற்காக துணைநிலை அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை இந்திய அரசு அமைத்துள்ளது.
கேளிக்கை விளையாட்டு மற்றும் பந்தய விளையாட்டுத் தளங்கள் வழங்கும் சேவையைப் பற்றியும் இக்குழு ஆய்வு செய்யும்.
இந்தியாவில் இணையதள விளையாட்டுகள் அதன் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளன என்பதால் வரிவிதிப்பு மற்றும் மதிப்பீடு போன்றவை தொடர்பான சிக்கல்களுக்கு இது வழிவகுக்க இருக்கிறது.
எனவே, இந்த நிறுவனங்களின் சேவை மதிப்பீடு சார்ந்த நிச்சயமற்ற தன்மையைப் புரிந்து, ஆய்வு செய்து அதற்கான தீர்வினை உருவாக்குவதற்காக இந்தக் குழுவானது அமைக்கப் பட்டுள்ளது.
மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய நிதி அமைச்சர் தலைமையிலான சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்திடம் இக்குழுவானது ஆறு மாதத்தில் தமது அறிக்கையினைச் சமர்ப்பிக்கும்.