இணையத்தை அணுகுவதற்கான உரிமை - கேரள உயர் நீதிமன்ற உத்தரவு
September 20 , 2019 2145 days 690 0
கேரள உயர் நீதிமன்றமானது, இணையத்தை அணுகுவதற்கான உரிமையானது பின்வரும் இரண்டின் ஒரு பகுதியாகும் எனக் கூறியுள்ளது.
கல்விக்கான அடிப்படை உரிமை
அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் தனியுரிமை
கேரள மாநிலத்துக்கு எதிராக ஆர்.கே.பஹீமா ஷிரின், 2019 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கின் மிக முக்கியத் தீர்ப்பாக இது வழங்கப்பட்டுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவி பஹீமா ஷிரினை மீண்டும் அனுமதிக்குமாறு கோழிக்கோடு ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியின் முதல்வருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு கைப்பேசியைப் பயன்படுத்தியதற்காக ஷிரின் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
2016 ஆம் ஆண்டில், அரசாங்கங்கள் இணைய அணுகலை வேண்டுமென்றே சீர்குலைப்பதைக் கண்டித்து ஒரு கட்டுப்படுத்தாத தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மன்றம் வெளியிட்டது.
இணையத்தை அணுகுவதற்கான உரிமை என்பது ஒரு அடிப்படை சுதந்திரம் மற்றும் கல்விக்கான உரிமையை உறுதி செய்வதற்கான ஒரு கருவியாகும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
பி. ஜக்ஜீவன் ராமிற்கு எதிரான எஸ். ரெங்கராஜன் மற்றும் பிறர் தொடர்ந்த உச்சநீதிமன்ற வழக்கு (1989) ஆனது அடிப்படை சுதந்திரத்திற்கானக் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்த முடியும் என்பதை நிலைநாட்டியுள்ளது .
ஆனால் இதனைத் கட்டாயத் தேவையின் போது மட்டுமே நியாயப்படுத்த முடியும் என்றும் வசதிக்காகவோ அல்லது சூழ்நிலைக்கு ஏற்பவோ நியாயப்படுத்த முடியாது என்றும் இந்த வழக்கு உறுதிபடுத்தியுள்ளது.