பாரத் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனமானது அல்ட்ரா கேஷ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இது பாரத் எரிவாயு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு LPG சிலிண்டர்களை முன் பதிவு செய்வதற்காக வேண்டி குரல் பதிவு அடிப்படையிலான ஒரு எண்ணிமக் கட்டண வசதியை வழங்குவதற்கான ஒரு கூட்டிணைவாகும்.
திறன்பேசி அல்லது இணைய அணுகல் வசதி இல்லாத வாடிக்கையாளர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்தி சிலிண்டர்களை முன்பதிவு செய்து ‘UPI 123PAY’ அமைப்பு மூலம் பணம் செலுத்தலாம்.