இந்த அறிக்கையானது சர்வதேச உத்திசார் ஆய்வுகளுக்கான கல்வி நிறுவனத்தினால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு நாட்டினுடைய இணைய வழி சூழல் அமைப்பினையும், நாட்டின் சர்வதேசப் பாதுகாப்பு, பொருளாதாரப் போட்டித் தன்மை மற்றும் இராணுவ விவகாரங்களில் அது எவ்வாறு தலையிடுகிறது என்பதையும் இந்த அறிக்கையானது பகுப்பாய்வு செய்கிறது.
இந்த அறிக்கையானது உலக நாடுகளை இணையவழி திறன்களின் (அதிகாரங்கள்) அடிப்படையில் மூன்று அடுக்குகளாகப் பிரித்துள்ளது.
முதல் அடுக்கு – முறைமைகளின் (methodology) அனைத்துப் பிரிவுகளிலும் உலக அளவில் முன்னணி பலம் கொண்ட நாடுகள்.
இந்த அடுக்கிலுள்ள ஒரே நாடு அமெரிக்கா ஆகும்.
இரண்டாம் அடுக்கு – சில பிரிவுகளில் மட்டும் உலகளவில் முன்னணி பலங்களை கொண்ட நாடுகள்.
ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்சு, இஸ்ரேல், ரஷ்யா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகியவை இந்த அடுக்கில் இடம் பெற்றுள்ளன.
மூன்றாம் அடுக்கு – சில பிரிவுகளில் பலத்தினையும் இதர சில பிரிவுகளில் குறிப்பிடத்தக்க பலவீனத்தினையும் கொண்டுள்ள நாடுகள்.