52-வது PRAGATI கூட்டத்தின் போது, இணையவழி நிதி மோசடி வழக்குகளுக்கு e-Zero முதல் தகவல் அறிக்கை (FIR) முறையைச் செயல்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் இந்தியப் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
e-Zero முதல் தகவல் அறிக்கை என்பது சரிபார்க்கப்பட்ட இணையவழி நிதி மோசடி புகார்களை Zero FIRs ஆக மாற்றும் ஒரு டிஜிட்டல் அமைப்பாகும் என்ற நிலையில் இதன் மூலம், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றுவதற்கு முன்பாக, எந்த ஒரு காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்ய முடியும்.
தேசிய இணையவழிக் குற்றத்திற்கான புகாரளிக்கும் தளம் (NCRP) அல்லது 1930 என்ற இணையவழிக் குற்றத் தடுப்பிற்கான உதவி எண் மூலம் புகாரளிக்கப்படும் ₹10 லட்சத்திற்கும் அதிகமான இணையவழி நிதி மோசடிப் புகார்களை இந்த அமைப்பு உள்ளடக்குகிறது.
இணையவழிக் குற்ற வழக்குகளை விரைவாகப் பதிவு செய்வதற்கும் விசாரிப்பதற்கும் ஏதுவாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் இயங்கும் இந்திய இணைய வழிக் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் (I4C) இது ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
இணையவழி மோசடியில் இழந்த பணத்தை மீட்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த Golden Hour எனப்படும் முக்கிய நேரத்தில் விரைவான நடவடிக்கையை உறுதி செய்வதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.