மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் (MeitY) ஆனது சமீபத்தில் இணையவழி விளையாட்டு முறைகளுக்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
இந்த முன்மொழியப்பட்ட விதிகளானது, 2021 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளில் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் எண்ணிம ஊடக நெறிமுறைகள் குறியீடு) மேற்கொள்ளப்பட்ட திருத்தமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் படி இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் ஒரு சுய ஒழுங்குமுறை அமைப்பில் பதிவு செய்ய வேண்டும்.
இணையவழி விளையாட்டு நிறுவனங்கள், பயனர்களின் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிதல்), வெளிப்படையான முறையில் பணம் பெறுதல் கொள்கை மற்றும் பணத்தைத் திரும்ப வழங்கல் உள்ளிட்டவற்றுடன் கூடிய கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இதன் படி விளையாட்டு நிறுவனங்களும் சமவாய்ப்பு எண் உருவாக்க சான்றிதழைப் பெற வேண்டும்.
இதில் இணைய வழி விளையாட்டு நிறுவனங்களானது விளையாட்டுகளின் முடிவுகளை வைத்து பந்தயத்தில் ஈடுபட அனுமதிக்கப் படாது.
சமூக ஊடகங்கள் மற்றும் இணைய வழி வர்த்தக நிறுவனங்களைப் போலவே, இணையவழி விளையாட்டு நிறுவனங்களின் தளங்களும், அந்தத் தளம் விதி முறைகளை முறையாகப் பின்பற்றுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக என்று ஓர் இணக்க அதிகாரியை நியமிக்க வேண்டும்.