இணையவெளி மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு காப்பீடு
February 13 , 2025 210 days 181 0
இணையவெளி மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு காப்பீடு குறித்து மத்திய நிதிநிலை அறிக்கை உரையில் இரண்டு அறிவிப்புகள் வெளியிடப்ப ட்டன.
முதலாவதாக, பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் இணையவெளி மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களுக்கு சுகாதாரக் காப்பீடு வழங்கப்படும்.
இரண்டாவதாக, அத்தகையத் தொழிலாளர்களுக்கு e-Shram இணைய தளம் மூலம் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்பதோடு இது 1 கோடி தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இணையவெளி மூலம் திரட்டப்படும் தொழிலாளர்கள் என்பவர்கள் குறுகிய கால, பணிச் சூழல் தகவமைப்பிற்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் அல்லது பணிகளில், மிகப் பெரும்பாலும் எண்ணிமத் தளங்கள் மூலமாகவோ அல்லது ஒரு சுயாதீன ஒப்பந்தக் காரர்களாகவோ பணியாற்றும் ஒரு தொழிலாளர் ஆவார்.
இணையவெளி மூலம் திரட்டப்படும் தொழிலாளர் முறையானது உணவு விநியோகம், வாடகை வாகனங்கள் சேவை/பயணப் பகிர்வு, இணைய வணிகம் மற்றும் பிற தொழில்முறை சேவைகள் என பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் உள்ளது.
இந்தியாவில் 2024-25 ஆம் நிதி ஆண்டில் இணையவெளியின் மூலம் திரட்டப்படும் பணியாளர்கள் எண்ணிக்கை சுமார் 12.7 மில்லியனாக இருக்கும் என்று நிதி ஆயோக் அமைப்பானது மதிப்பிட்டுள்ளது என்பதோடு இது 2029-30 ஆம் ஆண்டில் சுமார் 23.5 மில்லியனை எட்டும் எனவும் மதிப்பிடப் பட்டுள்ளது.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, ஜான் மேனார்ட் கெய்னிஸ் தனது 'The Economic Possibilities for our Grandchildren' என்ற அவரது முக்கியக் கட்டுரையில் மூன்று மணி நேரப் பணி நேரம் அல்லது 15 மணி நேர வேலை வாரங்கள் குறித்து கணித்திருந்தார்.